Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகர் வீட்டில் அதிரடி சோதனை! சிக்கிய மைத்துனர்! நடிகை கொடுத்த ரகசிய குற்றச்சாட்டு

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரும் சமூக சேவகருமான விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலிசார் அதிரடி சோதனை நடத்தினர்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி அண்மையில் சிறை சென்றவர் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா மற்றும் 14 பேர். இவர் அளித்த தகவலின் படி தான் இந்த சோதனை நடத்தப்பட்டது.

மேலும் போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனருக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்பட்ட நிலையில் அவர் தலை மறைவு ஆகியுள்ளாராம்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பின் தொடர்ந்த போதை பொருள் புழக்கம் குறித்த குற்றச்சாட்டில் சிலர் சிக்கி தீவிர விசாரணை வளைத்திற்குள் கொண்டு வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.