தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அஞ்சனா ரங்கன்.
திருமணத்திற்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கிய இவர் தற்போது பல சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். அப்போது ஒருவர் பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்து கொள்கிறீர்களா என கேள்வி எழுப்ப அதற்கு அஞ்சனா பதிலளித்தார்.
அதாவது, திரும்ப திரும்ப கேட்கிறேன், நமக்கு இதெல்லாம் தேவையா கோபி என பதில் அளித்துள்ளார்.