செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி தற்போது பிரபல முன்னணி தொகுப்பாளனியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அர்ச்சனா. சன் டிவியின் மூலம் ஆங்கராக களம் இறங்கிய இவர் அதனைத் தொடர்ந்து பல சேனல்களில் உள்ள ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். திருமணத்திற்கு பின்பு மீடியாவில் இருந்து சற்று விலகி இருந்த இவர் மீண்டும் ஜீ தமிழில் தொகுப்பாளினியாக தனது பணியை தொடங்கினார்.
அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களம் இறங்கி அனைவருக்கும் பரிச்சயமான இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் இவரை பல பேர் வெறுத்து இருந்தனர் ஆனால் எதற்கும் சோர்ந்து போகாமல் அர்ச்சனா மீண்டும் தொகுப்பாளினியாக விஜய் தொலைக்காட்சியிலேயே பணியாற்ற தொடங்கினார். தற்போது மீண்டும் ஜீ தமிழில் இணைந்துள்ள அர்ச்சனா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் தனது 15 வயது மகள் சாராவுடன் இணைந்து சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியும் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் தொகுப்பாளனி அர்ச்சனா தனது மகளுடன் இணைந்து அண்மையில் ஒரு பேட்டியில் பங்கேற்று இருக்கிறார்.
அப்பொழுது சாரா, நான் மீடியாவில் இருப்பதால் எனக்கு நண்பர்களே கிடையாது. என்னை விட்டு விலகிவிட்டனர். என் அம்மாதான் எனக்கு பெஸ்ட் பிரெண்ட் எனக் கூறி கண்கலங்கியுள்ளார். உடனே அர்ச்சனாவும் 15 வயதில் மீடியாவில் இருப்பதால் நண்பர்களே கிடையாது என்பது நியாயமே கிடையாது. ரொம்ப கஷ்டம். எப்பொழுதும் என்னிடம் வந்து அழுவாள், நான் அவளுக்கு சிறந்த நண்பராக இருப்பேன் என கலங்கியபடி பேசியுள்ளார்.