Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் டிவிக்கு போகாததற்கு காரணம் இதுதான் ? VJ பாவனா ஓபன் டாக்

vj Bhavana About Colors Tamil Show

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் பாவனா. அதன்பின்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை பற்றி பேசும் வேலையை செய்து வருகிறார்.

மேலும் இவர் சமீபத்தில் மீண்டும் விஜய் டிவி பக்கம் செல்வீர்களா என கேட்டதற்கு போகமாட்டேன் என்னுடைய ஸ்டைல் வேற அவர்களுடைய ஸ்டைல் பெற அவர்கள் இப்போது காமெடியில் கவனம் செலுத்துகிறார்கள் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இதனால் விஜய் டிவி பக்கம் போகாமல் கலர்ஸ்-தமிழ் பக்கம் சென்றது ஏன் என கேட்கப்பட்டது.

அதற்கு எனக்கு முதல் முறையாக ஜெயா டிவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது வெங்கட் ரமணி சார் தான். அவர் அழைத்ததால் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளேன். எப்போதும் வந்த வழியை மறக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்

vj Bhavana About Colors Tamil Show
vj Bhavana About Colors Tamil Show