Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நிச்சயதார்த்தம் முடிந்த நேரத்தில் சோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா- இதுதான் விஷயமாம்

சினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி பல சீரியல் நாயகிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் சித்ராவை கூறலாம்.

சமூக வலைதளத்தில் பார்த்தால் தெரியும் இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் என்பது புரியும். அண்மையில் சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது, மாப்பிள்ளையின் பெயர் ஹேமந்த்.

இவர் சொந்தமாக தொழில் செய்பவராம். நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததில் சந்தோஷம் என்றாலும் கூடவே சித்ராவிற்கு ஒரு சோகம்.

அதாவது ஹேமந்த் அவர்களுக்கு திருவேற்காட்டில் உள்ள பெரிய மண்டபம் சொந்தம் என்று சமூக வலைதளங்களில் செய்தி உலா வந்ததாம். ஆனால் உண்மையில் அது அவருடையது இல்லையாம்.

சிலர் பரபரப்புக்காக பொய்யான தகவலை பரப்புகிறார்கள், இதெல்லாம் மிகவும் தன்னை அப்செட் ஆக்குவதாக கூறியுள்ளார்.

சித்ராவை திருமணம் செய்யப்போகும் ஹேமந்த் இவர்தான்,