Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் இடம் டிடி கேட்ட கேள்வியால்.? கொந்தளித்த ரசிகர்கள்

VJ DD Ask The Bridgerton Whatsapp No to Dhanush

தென்னிந்திய ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான “தி கிரே மேன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். ஜூலை 22 ஆம் தேதியில் netflix ott தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் “தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ள ஆக்சன் சீன்களை படக்குழு இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தோடு இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இப்படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அதில் இந்த படத்தின் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று கேட்ட கேள்விக்கு அது எப்படி கிடைத்தது என்று தனக்கே தெரியவில்லை என்று நகைச்சுவையான பதிலை அளித்துள்ளார். அந்த பதிலை கேட்டு அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோவும் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது குறித்து தொகுப்பாளர் டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதாவது உங்களை பார்க்கும்போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது என்பதை விவரிக்க முடியவில்லை தனுஷ் சார். அமெரிக்காவில் மாஸ் பண்றீங்க என்று கூறியுள்ளார். மேலும் பின்குறிப்பாக ஒரு சீட் தள்ளி இருக்கிற அந்த ப்ரிட்ஜெர்டன் ஹீரோ வாட்ஸ்ஆப் நம்பர் கிடைக்குமா? என்று தனுஷின் கிண்டலாக கேட்டு பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவினை பார்த்து பொங்கி எழுந்த தனுஷின் ரசிகர்கள் ஏம்மா டிடி அடங்கவே மாட்டீங்களா, தனுஷ் அண்ணாவை பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது என்று பல கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் சில ரசிகர்கள் கமெண்டில் கலாய்த்து வருகின்றனர்.