தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தமிழ் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தீபிகா. இந்த கண்ணன் ஐஸ்வர்யா ஜோடிப்பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
ஆனால் முகத்தில் முகப்பரு இருப்பதாகவும் அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்யாத காரணத்தினால் இது சீரியலில் இருந்து தீபிகா நீக்கப்பட்டார். இதனால் வருத்தப்பட்டு தீபிகா பேசி வந்தார். நான் சரியாக நடிக்கவில்லையா? முகப்பரு இருந்தால் நான் என்ன செய்வேன் அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். சரியாவதற்கு காலதாமதமாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் அப்படியிருக்கையில் இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
இப்படியான நிலையில் தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜில்லுனு ஒரு காதல் என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடித்துள்ள காட்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. முகப்பரு இருந்தாலும் பரவாயில்லை என ஐஸ்வர்யாவை அழைத்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வாய்ப்பு கொடுத்து இருப்பது தீபிகா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.