தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிக்கு பாச கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் விறுவிறுப்பான கதை களத்துடன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
கண்ணனாக நடித்து வந்த சரவணன் விக்ரம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் ஒருவராக சென்றுள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற தினமே பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஷூட்டிங் நடந்து முடிந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
ஐஸ்வர்யாவாக நடித்து வரும் தீபிகா கண்ணனுடன் இறுதி நாள் ஷூட்டிங்கில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஜீவா இடையில் புகுந்து டிஸ்டர்ப் செய்துள்ளார்.
இதோ பாருங்க
View this post on Instagram