தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர் மகேஸ்வரி. சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். சமுத்திரகனி நடிப்பில் வெளியான ரைட்டர் படத்திலும் நடித்திருந்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த நிலையில் ஒரே வருடத்தில் கணவரை பிரிந்து விட்டார். நிறைய அட்ஜஸ்ட் பண்ண வேண்டி இருந்தது. நானும் அதைச் பண்ணிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை அதனால் வெளியே வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
எனக்கு என் மகன் தான் முக்கியம். அவன் என்னை நம்பி தான் இந்த உலகத்திற்கு வந்துள்ளேன். அவனை ஏற்றுக் கொண்டு நல்லபடியாக பார்த்துக் கொள்பவர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன். ஆனாலும் எனக்கு இரண்டாவது திருமணம் எப்படி அமையும் என்கிற பயமும் இருக்கிறது. யாராவது ஜோடியாக சென்றால் நமக்கும் இப்படி ஒருவர் இருக்க மாட்டாரா என பலமுறை ஏங்கி உள்ளேன் என பேசியுள்ளார்.
விஜே மகேஸ்வரி தன்னுடைய முதல் கணவருடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.