தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி 35 நாட்கள் முடிவடைந்து விட்டது.
இதுவரை சாந்தி அசல் கோளாறு ஷெரினா என மூவர் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று விஜே மகேஸ்வரி நான்காவது ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் 35 நாட்கள் இருந்த அவர் இந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நாளைக்கு 23 ஆயிரம் என்ற கணக்கில் 35 நாட்களுக்கு மொத்தம் 8 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தான் தற்போது சமூக வலைதளங்கள் டாப் ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது.