டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் தற்போது பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
டிவி நிகழ்ச்சிகளில் பலர் அவரை கலாய்ப்பதும், இவர் பலரை கலாய்ப்பதும் என வேடிக்கையாக செல்வது பலருக்கும் பிடித்தமான ஒன்று. பலரையும் சிரிக்க வைத்து மகிழ்வார்.
இந்நிலையில் தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்லும் அவர் தன்னை 25 வருடமாக டார்சர் செய்த நபர் என செல்லமாக கூறி தன் சகோதரரை பார்க்க செல்லும் அவர் தம்பி ரோஹித்துக்கு நேரில் ராக்கி கட்ட சென்று சர்ப்பிரைஸ் கொடுக்கிறார்.