தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. பரத் நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை சிம்புவின் குரலில் காலத்துக்கும் நீ வேணும் என்ற பாடல் லிரிக்ஸ் விடியோ வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.