தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வசூல் செய்தது.
தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் இந்த படம் ஏழு நாள் முடிவில் ரூபாய் 52 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க செல்வதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக VTK தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விக்ரம் படம் வெற்றியை கமல் பரிசளித்து கொண்டாடியதை போல் இவரும் சிம்புவிற்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குனரான கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Producer Dr @IshariKGanesh gifted a Brand New Luxury Car to #Atman @SilambarasanTR_ & Royal Enfield bike to Director @menongautham for the Huge success of #VendhuThanindhathuKaadu at #VTKSuccessParty@arrahman @VelsFilmIntl @RedGiantMovies_ @Udhaystalin pic.twitter.com/037UU5j4nH
— Vels Film International (@VelsFilmIntl) September 24, 2022