கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இயக்க உள்ளார். மேலும் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் டீஜே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதற்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் ஆரி, சிம்புவின் ஆட்டத்தை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார். பத்து தல படத்தின் இயக்குனர் ஓபிலி என் கிருஷ்ணா, முன்னதாக இயக்கிய நெடுஞ்சாலை படத்தில் ஆரி ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.