Tamilstar
Health

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் டிராகன் பழம்..

Dragon fruit helps to reduce cholesterol

நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க டிராகன் பழம் உதவுகிறது.

பேரிக்காய் போன்ற சுவையில் இருக்கும் இந்த டிராகன் பழம் நம் உடலுக்கு வரும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. இதில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், கரோட்டின், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள டிராகன் பழம் மிகவும் உதவுகிறது. இதில் மெக்னீசியம் அதிகமாக இருப்பதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

பொதுவாகவே இதய பிரச்சினைகளுக்கு மிக முக்கியமாக இருப்பது கொலஸ்ட்ரால். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். மேலும் செரிமான பிரச்சனை ஜீரணம் வயிற்று வலி வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு டிராகன் பழம் மருந்தாக பயன்படுகிறது.

டிராகன் பழத்தில் இருக்கும் பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.