உதட்டில் இருக்கும் கருமை நிறத்தை ஓகே இளஞ்சிவப்பு நிறமாக மாற நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
பொதுவாகவே ரசாயனம் கலந்த அழகு சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் பலருக்கு உதடுகள் கருப்பாக மாறிவிடும். இது முகத்தின் அழகை கெடுத்து விடுகிறது.
அப்படி இருக்கும் உதட்டை நாம் மென்மையாக மாற்ற வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்தலாம். தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வாரத்திற்கு மூன்று முறை உதடுகளில் தடவி வந்தால் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். ஏனெனில் தேன் மற்றும் எலுமிச்சையில் ஒளிரும் பொருட்கள் இருக்கிறது.
மேலும் கற்றாழை மற்றும் தேன் பயன்படுத்தி லிப் பேக் செய்து கொள்ள வேண்டும். முதலில் கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் தேனை கலந்து 20 நிமிடம் உதடுகளில் தடவி வரவேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவது நம் உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும்.
இது மட்டும் இன்றி ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தினமும் இரவு தூங்குவற்கு முன் உதடுகளில் தடவி வர வேண்டும். அப்படி தடவி வந்தால் கருமை நீங்கி உதடு இளம் சிவப்பாக மாரும்.