கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான். அப்படி உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்து குறைப்பது வழக்கம். அப்படி எளிமையான முறையில் இலவங்கப்பட்டை தேநீர் வைத்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியும்.
கெட்ட கொலஸ்ட்ரால் குறைவது மட்டுமில்லாமல் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும்,மேலும் இதயத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபட்டு உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வோம். இலவங்கப்பட்டை தேநீர் பயன்படுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த லவங்கப்பட்டை தேநீர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.