Tamilstar
Health

சருமத்திற்கு தர்பூசணியால் உண்டாகும் பயன்கள்!

தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும்.

தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின்
ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும்.

* சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும்.

* தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.

* முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த நேரம் தான் அதனை போக்குவதற்கு சரியான காலம். ஏனெனில் இந்த பழம் கோடைகாலத்தில் மட்டும் கிடைப்பதால், அதனை வாங்கி, அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும்.