எலும்புகள் வலுவாக இருக்க நம் உணவில் என்னென்ன சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக பார்க்கலாம்
முதலில் எலும்புகளுக்கு பலத்தை தரும் காய்களில் ஒன்று பீன்ஸ் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் பீன்சை சேர்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் டி இருப்பதால் எலும்புகள் வலுப்பெற மிகவும் அவசியமாகிறது.
மேலும் உலர் பழங்களான முந்திரி திராட்சை பாதாம் போன்ற உலர் பழங்களை நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக கிடைக்கும். ஆனால் வெயில் காலங்களில் உலர் பழங்களை தவிர்ப்பது சிறந்தது.
புரதச்சத்து நிறைந்த முட்டையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தவும் தசைகளை பலப்படுத்தவும் பெரும் அளவில் உதவி செய்கிறது.
இதனைத் தொடர்ந்து எலும்புகள் மற்றும் கால்சியத்தின் நன்மைக்கு தினமும் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் எலும்புகளை வலுப்படுத்தும் பாலில் அதிகப்படியான சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
இனிப்பு சுவைக்கு சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்ப்பதனால் இரும்பு மற்றும் கால்சியம் சத்து நம் உடலுக்கு அதிகமாகவே கிடைக்கும் இப்படி அன்றாட ம் எளிமையான முறையில் சத்தான உணவுகளை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது சிறந்தது.,