தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரிசு இயக்குனர் வம்சி இயக்கத்திலும் தில் ராஜு தயாரிப்பிலும் வெளியான இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்.
மேலும் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் என ஆறு மாதங்களுக்கு 120 நாட்கள் விஜய் கால் சீட் கொடுத்தார் அவர் ஒரு படத்தை 120 நாட்களில் முடிப்பதை போல அனைத்து நட்சத்திரங்களும் பின்பற்றினால் அது தயாரிப்பாளருக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இப்போது யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை விஜய்யை பார்த்து தெலுங்கு சினிமா மாற வேண்டும் என்ற ஆசை தெரிவித்துள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
