Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நான் செத்ததுக்கு பிறகு அது உயிரோடு இருந்தால்? கமல் ஹாசனின் அதிரடி பேச்சு

What if it was alive after I died Kamal Haasan's speech

உலக நாயகன் என திரையுலகினரால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் இன்னும் இன்னும் புதிய பரிமாணம் கண்டுவருகிறார் என்பதை என்பதை அவரின் நடவடிக்கை சொல்லிகொண்டு இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அவரும் 2021 ல் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். இதற்கான பணிகளை அவர் தொடங்கிவிட்டார்.

நடிப்பு மட்டுமில்லாது சினிமாவின் பல விசயங்களை நுட்பத்துடன் தெரிந்து வைத்திருக்கும் அவர் சக கலைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து பாராட்ட தவறுவதில்லை.

ஒரு முறை அவர் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நான் செத்ததுக்கு அப்புறமும் அந்த படம் உயிரோடு இருக்கும்னா அதுதான் சக்சஸ் என குறிப்பிட்டுள்ளார்.

அதை தற்போது சூர்யா ரசிகர்கள் வீடியோவாக பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். பல சோதனைகள், தோல்விகளுக்கு பின் சூர்யாவுக்கு அண்மையில் வந்த சூரரை போற்று படம் வெற்றியளித்துள்ளது இந்த மகிழ்ச்சியின் பின்னணி.