Tamil News

ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை – பிரபு தேவா

பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேள்’. ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் குறித்து பிரபுதேவா கூறும்போது, ‘இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை இப்படத்திற்கு தந்துள்ளார். ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால், இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன்.

நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குனர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்’ என்றார்.

Suresh

Recent Posts

கில்லி தனலட்சுமி கேரக்டரை ரீ கிரியேட் செய்த அனிதா சம்பத்,வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நம்பர் ஒன் வசூல் மன்னனாக வலம் வரும் இவரது…

4 mins ago

“நான் அடுத்த சிவகார்த்திகேயன் எல்லாம் இல்லை”: பத்திரிக்கையாளர் கேள்விக்கு கவின் பதில்

தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் கவின். இவரது நடிப்பில் அடுத்ததாக…

2 hours ago

மாதம்பட்டி ரங்கராஜ் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன்…

3 hours ago

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள போகும் சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன்…

3 hours ago

கண்பார்வையில் பிரச்சனையா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக!

கண்பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் வாங்க பார்க்கலாம். உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கியமான ஒன்று கண். அந்த…

5 hours ago

அரண்மனை 4 திரை விமர்சனம்

ஒரு கிராமத்தில் இருக்கும் பழைய அரண்மனையில் சில பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்…

5 hours ago