Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்… ரசிகர்களிடம் பார்த்திபன் கேள்வி

What title can be given to the film ... Parthiban question to the fans

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.

சமீபத்தில் ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்தார். இந்நிலையில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்…’ என்று நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.