கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் குழந்தையின் மன வளர்ச்சிக்கு நாம் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
பொதுவாகவே கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பெண்கள் உணவில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். ஆரோக்கியம் நிறைந்த மற்றும் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவார்கள்.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமாக பருப்பு பட்டாணி கொண்டைக்கடலை சோயா பீன்ஸ் போன்ற முக்கிய உணவுப் பொருள்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் அதிகம் நார்ச்சத்து இரும்புச்சத்து கால்சியம் நிறைந்துள்ளது.
பச்சை பட்டாணி சாப்பிட வேண்டும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறது. மேலும் உலர் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் இருக்கும் சோர்வை குறைக்க இனிப்பு உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.