Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘குக் வித் கோமாளி 3’ எப்போது? – வெளியான சூப்பர் அப்டேட்

When is ‘cook with comali 3’? - Super update released

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது ‘குக் வித் கோமாளி’ எனும் சமையல் நிகழ்ச்சி. கலகலப்பு நிறைந்த இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார். அதேபோல் பவித்ரா, தர்ஷா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடிக்கின்றனர். புகழ், பாலா ஆகியோர் காமெடியனாக நடித்து வருகின்றனர். அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். ஓரிரு மாதத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.