Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலரை கரம்பிடிப்பது எப்போது? – நடிகை டாப்சி விளக்கம்

When to hold the hand of the lover - Taapsee Pannu

தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி, பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு டாப்சியும், டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் டாப்சி வெளியிட்டு வந்தார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்தனர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் காதலர் குறித்து நடிகை டாப்சி கூறியதாவது: “சினிமா துறையில் இருப்பவரை காதலிக்க விரும்பவில்லை. எனது சொந்த வாழ்க்கையும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மத்தியாஸ் எனக்கு நெருக்கமான வளையத்துக்குள் இருக்கிறார்.

அதனாலேயே அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறேன். திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்கள் என்று நடிக்கும் எண்ணிக்கை 2 அல்லது 3 படங்கள் என்று குறையும்போது திருமணத்துக்கு தயாராவேன்” என்றார்.