Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹரி படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை?

Which famous actress is paired with Arun Vijay

‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே, ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அருண் விஜய்யும் பிரியா பவானி சங்கரும் ஏற்கனவே மாஃபியா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.