Tamilstar
Health

கொய்யா பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது.. பார்க்கலாம் வாங்க..

Who should not eat guava fruit.. Let's buy it

கொய்யாப்பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று தெளிவாக பார்க்கலாம்.

கொய்யா பழத்தில் பொதுவாகவே அதிகமான ஊட்டச்சத்து இருப்பது அனைவரும் அறிந்ததே. கொய்யாப்பழம் பெரும்பாலும் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று. ஏனெனில் இதில் நார்ச்சத்து வைட்டமின் சி பொட்டாசியம் புரதம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் சிலர் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்ததாக இருக்கிறது.

கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் வயிறு உப்பசம் பிரச்சனை ஏற்படுத்தும்.

கொய்யாப்பழம் அதிகமாக சாப்பிட்டால் செரிமான அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.

அதிகமாக கொய்யா பழம் சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும். கொய்யாவை சாப்பிட்டு உடனே தூங்க கூடாது அப்படி தூங்கினால் உடல் வீக்கத்தை அதிகரிக்கும்.

இது மட்டுமில்லாமல் சளி இருமல் பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது அசோகரியத்தை உருவாக்கும்.

இந்தப் பழம் குளிர்ச்சியானதாக இருப்பதால் பக்கவிளைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழத்தை தவிர்ப்பது சிறந்தது. 100 கிராம் கொய்யா பழத்தில் ஒன்பது கிராம் இயற்கை சர்க்கரை இருப்பதால் கொய்யா பழத்தை குறைவாக சாப்பிடுவது நல்லது.