தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ந்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். முதல்வரிடம் கோரிக்க மனுவையும் அளித்தார்.
முதல்வரை சந்தித்தது ஏன் என்பது குறித்து நடிகர் விவேக் கூறியுள்ளதாவது: “அரசியலுக்கோ அல்லது என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களை பார்க்கவில்லை. தமிழ்த் துறவி ‘அருட்பா’ தந்த வள்ளலார் (1823-1874) தன்வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம்” என தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கோ/என் சொந்த காரணமாகவோ @CMOTamilNadu அவர்களை பார்க்கவில்லை.தமிழ்த் துறவி”அருட்பா”தந்த வள்ளலார்(1823-1874)தன்வாழ்வில்33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை” வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்ட மனு அளித்தேன்.இன்முகத்துடன் ஏற்றார்.நற்செய்தி வரலாம்🙏🏼 https://t.co/VKUBFjDAzs
— Vivekh actor (@Actor_Vivek) January 26, 2021