Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் வருவாரா ரோலக்ஸ்? சூர்யாவின் நச் பதில்

Will Rolex make a comeback Suriya's reply

67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 8 விருதுகளை பெற்றது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது. மேலும் ‘ஜெய்பீம்’ திரைப்படம் 2 விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் இவ்விழாவில் மனைவி ஜோதிகாவுடன் கலந்துகொண்ட சூர்யாவிடம், ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் கமல்ஹாசன். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தேன்” என்றார். ‘ரோலக்ஸ் மீண்டும் வருவாரா?’ என்ற கேள்விக்கு, “இதற்கு காலம் பதில் சொல்லும். படம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயம் மீண்டும் நடிப்பேன்” என்றார்.