2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.
இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளார் பிரசாந்த் நீல். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் யூடியூபில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் தொடர்ந்து பல்வேறு சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது உலக அளவில் அதிகம் பேர் பார்த்த டீசர் என்கிற பெருமையை பெற்றுள்ளது. தற்போது இந்த டீசரை 175 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இதற்கு முன், கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த முலன் படத்தின் டீசர் 175 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை கேஜிஎப் 2 டீசர் முறியடித்துள்ளது.
A Phenomenal 175 MILLION+ VIEWS 🔥#KGFChapter2Teaser: https://t.co/3xoDtHZ0be@TheNameIsYash @prashanth_neel @VKiragandur @hombalefilms @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @prakashraaj @BasrurRavi @bhuvangowda84 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @PrithvirajProd pic.twitter.com/eGBYsaA5dE
— Hombale Films (@hombalefilms) March 15, 2021