Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வரலாற்றிலேயே படுமோசமான TRP ரேட்டிங்.. அதல பாதாளத்திற்கு சென்ற பிக் பாஸ் 5

Worst Bigg Boss 5 tamil TRP Rating

சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இது தமிழில் நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த 5வது சீசனில் ராஜு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி, சஞ்சீவ் என சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

முதல் சீசனில் இருந்து கடந்த 4ஆம் சீசன் வரை TRPயில் தனக்கென்று தனி இடத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி வைத்திருந்தது.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஷாக்கிங் தகவல் என்னவென்றால், இதுவரை பிக் பாஸ் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, படு மோசமான TRP ரேட்டிங்கை கடந்த வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பெற்றுள்ளதாம்.

ஆம், கடந்த வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 நிகழ்ச்சி, 2.75 வரை மட்டுமே பெற்றுள்ளதாம். இது பிக் பாஸ் வரலாற்றில் மோசமான TRP ரேட்டிங் என்று கூறப்படுகிறது.