Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் யானை படத்தின் மேக்கிங் வீடியோ..

yaanai movie-making-video-release

அண்மையில் திரையரங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்த கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதை தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதேபோல் தற்போது சமீபத்தில் வெளியான அருண் விஜயின் “யானை” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் அருண் விஜய். இவரது நடிப்பில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி திரையரங்கில் “யானை” திரைப்படம் வெளியானது. இப்ப படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், தலைவாசல் விஜய், அம்மு அபிராமி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். விறுவிறுப்பு குறையாமல் திரையரங்கில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த யானை திரைப்படம் ரசிகர்களின் இடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மேலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக “யானை” படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேக்கிங் வீடியோக்களை ரசிகர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.