கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது தொடர்ந்து சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 7 நாளில் 700 கோடி வசூல் செய்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தின் வசூல் சாதனையையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்த படத்திற்காக யஷ் 25 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் கேஜிஎப் 2 படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை கிடுகிடுவென 50 கோடிக்கு உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா நடிகர்கள் உடன் ஒப்பிடும் போது 50 கோடி என்பது பெரிய சம்பளம் இல்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.