தமிழ் சின்னத்திரையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் நண்பர்களோடு ஹோட்டல் ஒன்றிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து திரும்பிய போது விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் சேதமடைந்தன. இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
இவரும் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளரான நிரூப்பும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக்கப் செய்துகொண்டனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் உங்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு யாஷிகா ஆனந்த் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். இப்போதைக்கு யாரையும் திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
