Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக யாஷிகா ஆனந்த் வெளியிட்ட பதிவு

yashika-anand emotional speech

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக திகழ்பவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்டு மக்களிடையே வலிமை மிக்க பெண்ணாக பிரபலமானார். அதனை அடுத்து இவர் வரிசையாக சில படங்களும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருந்த இவருக்கு ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் யாஷிகாவின் உயிர் தோழியான வள்ளிசெட்டி பவானி உயிரிழந்தார். அதன்பின் 3 மாத சிகிச்சையில் இருந்த யாஷிகா தற்போது குணம் அடைந்துள்ளார். அதன்பின் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தார்.

அந்த வகையில் கையில் சாவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் சொந்த வீடு வாங்கி தனது பெற்றோரின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றுவதாகவும் இதை நான் செய்வேன் என எதிர் பார்த்ததே இல்லை என்றும் இந்த மகிழ்ச்சியான செய்தியை தாமதமாக வெளியிட்டதற்கு என்னை மன்னித்து விடுங்கள் நான் சந்தித்த மோசமான சூழ்நிலைகள் மற்றும் கொரோனா வின் பாதிப்பால் இந்த வீட்டுக்குள் வரமுடியவில்லை. இப்போதுதான் நான் கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றதாக உணருகிறேன் என்று உருக்கமான பதிவை மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

yashika-anand emotional speech
yashika-anand emotional speech