தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு கத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல் ஹாசன் விட்டுவிட்டு வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். கடந்த வருடம் இவர் மகாபலிபுரம் சென்று நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு காரில் திரும்பியபோது பெரும் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருடைய தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் இரண்டு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட அதனைப் பார்த்த ரசிகர்களில் சிலர் உங்களுடைய விபத்து வீடியோவை அனுப்புங்க. வைப் போடனும் என கூறியுள்ளார். இதனால் கடுப்பான யாஷிகா ஆனந்த் நீ பொறந்த வீடியோவை அனுப்பு, நான் வைப் செட் பண்ணனும் என பதிலடி கொடுத்துள்ளார்.
இவருடைய இந்த பதிலடி பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.