இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’ இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது.
‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏழு கடல் ஏழு மலை போஸ்டர்இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இன்று இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி தங்களது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
The team of #YezhuKadalYezhuMalai wishes Director Ram and Nivin Pauly the best of birthdays!#7k7m #bday #nivinpauly@NivinOfficial@sooriofficial@yoursanjali @thisisysr @sureshkamatchi @VHouseProd_Offl@eka_dop @UmeshJKumar @silvastunt @johnmediamanagr@UmeshJKumar @silvastunt pic.twitter.com/d2iQeDtSWi
— V House Productions (@VHouseProd_Offl) October 11, 2023