யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை ஏ.வெங்கடேஷ் மேற்கொள்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் யோகிபாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நயன்தாராவும் யோகிபாபுவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.