தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த படத்திற்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற வருகிறது.
நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் பகத் பாஸில் மோகன்லால், பாலையா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோகி பாபு சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதாவது இப்பொழுது உள்ள இயக்குனர்களில் அதிக நகைச்சுவை உணர்வு உள்ள இயக்குனர் நெல்சன் என்றும் ரஜினிகாந்த் சார் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆர்வத்துடன் செட்டுக்கு வருகிறார் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் ரஜினி சார் நெல்சன் இடம் நம்ம யோகி பாபுவை சும்மா விடக்கூடாது என்னைப் பார்ட் 1 இல் மிகவும் கிண்டல் செய்துவிட்டார். இந்த பாகத்தில் அதை சரி கட்ட வேண்டும் என சொல்லி இருக்கிறாராம்.
இது மட்டுமில்லாமல் நாம் எந்த கவுண்டர் அவரை அடித்தாலும் பதிலுக்கு அவர் நன்றாக கவுண்டர் கொடுப்பார் அதனால் தான் அவர் இப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.