தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித் துறையில் முன்னணி காமெடி நடிகராக பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக பொம்மை நாயகி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பா ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் ஷான் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் யோகி பாபுவுக்கு திருமணம் நடந்து ஒரு மகனும் பிறந்தான். இதுவரை யோகி பாபுவின் மகனுடைய புகைப்படங்கள் எதுவும் இணையதளத்தில் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நடிகை சஞ்சனா யோகி பாபு மகனை கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
#YogiBabu son, with actress Sanjana pic.twitter.com/auplEP3dMy
— Parthiban A (@ParthibanAPN) July 22, 2022