Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பூஜையுடன் தொடங்கிய யோகி பாபுவின் புதிய படம்.. டைட்டில் என்ன தெரியுமா.?

yogibabu-upcoming movie-details

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் தான் யோகிபாபு. காமெடியில் தனக்கென தனி ஸ்டைலை மேற்கொண்டு வரும் இவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து வெளியான மண்டேலா, கூர்கா, தர்மபிரபு போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படங்களின் கதைகளும் அவருக்கு ஏற்றது போல் அமைந்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஹீரோவாக நடிக்க களமிறங்கியிருக்கிறார் யோகி பாபு. ‘மெடிக்கல் மிராக்கள்’ என்ற இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் யோகி பாபுவிற்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்த வைரலாகி ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.

yogibabu-upcoming movie-details
yogibabu-upcoming movie-details