Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சமந்தாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர்

Young actor paired with Samantha

சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. புராண கதையம்சம் கொண்ட படங்கள் பாக்ஸ்ஆபிஸிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.

இந்நிலையில், சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.