Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்

Young actress paired with Balakrishna

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ என பெரும் வரவேற்பை பெற்ற படங்களுக்குப் பிறகு போயபடி சீனு – பாலகிருஷ்ணா இணையும் 3-வது படம் இது. இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.

இதில் ‘பிசாசு’ படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அவருக்குத் தேதிகள் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்குப் பதிலாக சாயிஷா சைகல் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஆர்யாவை காதல் திருமணம் செய்த சாயிஷா கணவருக்கு ஜோடியாக டெடி படத்தில் நடித்துள்ளார். அதன் பின் அவர் ஒப்பந்தமாகி உள்ள படம் இது.

இதையறிந்த ரசிகர்கள் 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியாக நடிப்பதா என்று அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.