விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. அங்கு இந்தி நடிகர் சோனுசூட்டை விஷால் சந்தித்து பேசினார். அப்போது இந்தி படத்தில் நடிக்கும்படி விஷாலுக்கு சோனுசூட் அழைப்பு விடுத்துள்ளார். அதனை விஷால் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சோனுசூட் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி அவர் செய்த உதவிகள் பெரிய வரவேற்பை பெற்றன.
ஐதராபாத்தில் சோனுசூட்டுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அற்புதமான ஆன்மா சோனுசூட். கடவுள் மனித இனத்துக்கு தந்த பரிசு. அறிமுகம் இல்லாத குடும்பங்களுக்கு நீங்கள் செய்த சமூக பணிகள் எனக்கு ஊக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து இதுபோல் சிறப்பாக செயல்படுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Im elated & happy in meeting my darlin bro & wonderful soul @SonuSood u r gods gift 2 mankind. U hav inspired me for the social work u hav done and doing continously. Not many ppl take such an effort for unknown fmlies. Speechless hearing all the work being done by u. Keep rockin pic.twitter.com/8UK0WmlRlr
— Vishal (@VishalKOfficial) November 3, 2020