வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தான் வலிமை.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது படத்தின் ஓப்பனிங் சாங், நாங்க வேற மாதிரி சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளிவந்தது.
இந்த பாடல் முழுவதும் ஏதோ அஜித்தின் வாழ்க்கையை பின் தொடர்ந்தது போல், அவர் பேசிய வசனங்களை வைத்து விக்னேஷ் சிவன் வரிகளை எழுதிவிட்டார்.
நாங்க வேற மாதிரி பாடல் குறித்து யுவன் பேசுகையில், “இந்த பாடல் வினோத் சார் செம்ம மாஸாக வேண்டும் என்று கேட்டார், அதை மனதில் வைத்து, நம்ம தல-க்காக செம்ம மாஸாக இருக்கனும், நல்ல குத்து பாடலாக இருக்க வேண்டும், என்று இப்படி ஒரு பாடலை உருவாக்கினோம்” என்று யுவன் கூறியுள்ளார்.
All things #NaangaVeriMaari from THE @thisisysr himself! 😍🔥
➡️https://t.co/Sz4mRfxoki#Valimai pic.twitter.com/6HxFHkqC2T
— Sony Music South (@SonyMusicSouth) August 6, 2021