Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல் கோளாறு, யுவன் சங்கர் ராஜா போட்ட பதிவு

yuvan-shankar-raja-about-instagram-page details

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

தமிழ் புத்தாண்டின் ஸ்பெஷலாக இந்த படத்திலிருந்து விசில் போடு என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியானது. ஆனால் இந்த பாடல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் யுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறினார்.

இதற்கான காரணம் பாடல் குறித்து வெளியான விமர்சனங்கள் தான் என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

அதாவது டெக்னிக்கல் கோளாறு காரணமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் சரியாக இயங்கவில்லை அதை மீட்டெடுக்கும் வேலையில் தனது குழு ஈடுபட்டு இருப்பதாகவும் விரைவில் instagram திரும்புவேன் எனவும் தெரிவித்துள்ளார்.