இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய்தத்துக்கு “ உங்கள் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும்” என்று ஆறுதல் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் சஞ்சய் தத், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்கு பிறகு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
இருந்தபோதிலும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளக்கப்பட்டன. பின்னர் குணமடைந்தார். இந்நிலையில் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளது கண்டறியப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதனை அவர் நேரடியாக சொல்லாமல் சினிமாவிலிருந்து கொஞ்ச நாள் ஓய்வு எடுக்கப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பக்கத்திற்கு பதிலளித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், “நீங்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் ஓர் போராளி. இந்த வலி எத்தகையது என்பதை என்னால் உணர முடியும்.
ஆனால் நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர். எனவே இந்தக் கடினமான காலக்கட்டத்தையும் எதிர்கொள்வீர்கள் என தெரியும். என்னுடைய பிரார்த்தனை எப்போதும் இருக்கும். விரைவில் மீண்டு வர வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்
இதில் என்ன சோகம் என்றால் சஞ்சய் தத்தின் அம்மாவும் அவரது முதல் மனைவியும் புற்றுநோயால் தான் இறந்ததால், தற்போது அவரது குடும்பத்தில் மூன்று மூன்றாவது நபராக சஞ்சய்தத் பாதிப்புக்குள்ளாகிறது அவரது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.