தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சி சேனலாக விளங்கி வருகிறது சன் டிவி. நம்பர் ஒன் சேனலாக இருந்து வரும் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
சன் டிவி தொலைக்காட்சியின் தொடர்ந்து புதுப்புது சீரியல்களாக களம் இறக்கி வருகிறது. ஜீ தமிழ் சீரியல் நடிகர் விஜய் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கும் மல்லி என்ற புதிய சீரியல் கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் விரைவில் மேலும் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
வாரணம் ஆயிரம் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் ஹீரோவாக ஜீ தமிழில் புது புது அர்த்தங்கள் சண்டக்கோழி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நியாஸ் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ஈரமான ரோஜாவே புகழ் சுவாதி கொண்டா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.