தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் மதியம் முதல் இரவு வரை ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்தடுத்து 2 சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வரும் சனிக்கிழமையுடன் சீதா ராமன் சீரியலை முடிக்க டிவி சேனல் திட்டமிட்டுள்ளது.
இதை தொடர்ந்து வெகு விரைவில் நளதமயந்தி சீரியலையும் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.